தவேப வேளாண் இணைய தளம் ::வரையறை

நவீன வரையறை:
வளம் குன்றா வேளாண்மை என்பது பண்ணை முறையின் அமைப்புகள் மற்றும் செயல்முறைகளைப் பயன்படுத்தி.

  1. வேளாண் உற்பத்தியின் பொருளாதார திறனை அதிகப்படுத்துதல்.
  2. இயற்கை வளங்களின் அடிப்படையை நிலைப்படுத்துதல்.
  3. வேளாண் செயல்களால் மற்ற சூழ்நிலை அமைப்புக்களை ஒரே மாதிரி நிலைபடுத்துதல் ஆகும்.

வளம் குன்றா வேளாண்மையின் சில அடிப்படைக் கொள்ளைகள்:

  1. பண்ணை உற்பத்தித் திறனை நீண்டகாலத்திற்கு ஒரே மாதிரி வைத்திருக்க உதவுதல்.
  2. இயற்கை வளங்களின் அடிப்படை மற்றும் அதைச் சார்ந்து சூழ்நிலை அமைப்புகளுக்கு ஏற்படுத்தும் மோசமான விளைவுகளை களைதல், குறைத்தல் அல்லது தவிர்த்தல்.
  3. வேளாண்மையில் வேதிப்பொருட்களை பயன்படுத்துவதால் வரும் எச்சங்களைக் குறைத்தல்.
  4. வேளாண்மையிலிருந்து வரும் சமூக  பயன்களை (பணம் மற்றும் மணம் சம்பந்தமில்லாதது) அதிகரித்தல்.
  5. வானிலை மற்றும் சந்தைகளில் ஏற்படும் தீடீர் மாற்றங்கள் போன்ற இடர்பாடுகளை இளைவதன் மூலம் பண்ணை முறைகளை எளிதாகப் பயன்படுத்துதல்.

வேளாண்மையின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகள் நம்பிக்கை தரும்படி இல்லை என்று சிலர் விவாதம் செய்கின்றனர்.  இருந்தாலும், வளம் குன்றா வேளாண்மையை எப்படி அளவிடுவது என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

உலகத்தின் பார்வையில் வளம் குன்றா வேளாண்மை:

வரையறை1:
சுற்றுப்புற சூழல் நன்றாகவும், பொருளாதார ரீதியாக திறனுடையதாகவும், பண்பாட்டுக்கு பொருத்தமாகவும், புனித அறிவியல் அணுகு முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பொழுது வேளாண்மை வளம் குன்றாமல் இருக்கும். (என்.ஜி.லு. வளம் குன்றா வேளாண்மை சங்கம், 1992).

வரையறை 2:
குறைந்த - வெளிப்புற இடுபொருள் மற்றும் வளம் குன்றா வேளாண்மை (LEISA) என்பது உள்ளூரிலேயே இருக்கக்கூடிய இயற்கை மற்றும் மனித வளங்களை அளவாகப் பயன்படுத்துதல், (மண், நீர், தாவர வளம், அப்பகுதி தாவரங்கள் மற்றும் விலங்குகள், வேலையாட்கள், அறிவு மற்றும் திறன் போன்ற வளங்கள்) மற்றும் பொருளாதார  ரீதியாக பயன்படுத்தக்  கூடிய வகையிலும், சுற்றுப்புற சுழலைப் பாதிக்காதவாறும், பண்பாட்டுக்குத் தகுந்த மாதிரியும், சமூகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலும் உள்ள வேளாண்மையாகும். (ரெய்ஜின்டிஸ், ஹேவர்கோர்ட், + வாட்டர்ஸ் -பேயர், எதிர்கால வேளாண்மை, 1992).

வரையறை 3 :
நிலைப்பாடன வளர்ச்சி என்பது இயற்கை வளங்களின் அடிப்படையை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், தொழில்நுட்ப மற்றும் நிறுவன மாற்றங்களின் ஒருங்கிணைப்பால் மனிதனின் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததிகளுக்கான தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்தால் மற்றும் அதை அடைய உறுதி செய்வதும் ஆகும். இத்தகைய நிலைப்பாடான வளர்ச்சி (வேளாண்மை, வனவியல் மற்றும் மீன்வளத்துறைகளில்) நில, நீர், தாவர மற்றும் விலங்குகளின் மரபு வளங்களை பாதுகாத்தல், சுற்றுப்புற சுழலுக்கு ஊறு விளைவிக்காமல், தகுந்த தொழில்நுட்பத்துடன், பொருளாதார ரீதியாகப் பயன்படும் வகையிலும், சமூகத்தில் நடைமுறைபடுத்துவதேயாகும். (எப்.ஏ.ஒ.குழுவின் 94 வது கூட்டத்தின் 9416 அறிக்கை, 1998).

ஆதாரம் :  எப்.ஏ.ஓ. (1994) வளர்ச்சி மற்றும் கல்வி பரிமாற்றத் தாள்கள் (DEEP) : வளம் குன்றா வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாடு : பகுதி 1: லத்தீன் அமெரிக்கா மற்றம் ஆசியா, ரோம், பக்கம் 5.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024